book

கீதா கஃபே

Geetha Cafe

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கீதா ரவிச்சந்திரன்
பதிப்பகம் :கீதா ரவிச்சந்திரன்
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789811118227
Out of Stock
Add to Alert List

 திருமதி.கீதா ரவிச்சந்திரன் ஆங்கில இலக்கியத்தில் முது கலைப் பட்டம் பெற்றவர். வெளி நாடுகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர். திறமையான இல்லத்தரசி. குழந்தைகளைப் பேணி வளர்ப்பவர்.

பசி ஒரு மனிதனை, அதுவும் வேலை தேடி வெளி நாடு வந்துள்ள ஒருவனை, பிசாசுக்குப் படைக்கப்ப்ட்ட ரொட்டித்துண்டுகளைக்கூட திருட வைக்கிறது என்பதை, தன் மகன் ரொட்டி விளிம்புகளை ஒதுக்குவதுடன் ஒப்பிட்டு, சொந்த நாட்டுக்குச்செல்லும்போது கசங்காத துணிகளை அணிந்து செல்லும் ஒருவன் வெளி நாட்டில் கசங்கிய துணியாய் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருப்பதை 'பசி பலவிதம்' என்று நெகிழ்வோடு விவரிக்கிறார்.

தொலைக்காட்சியினரால் குழந்தைகளுக்கு நடத்தப்படும் போட்டியினை விமர்சித்தும், குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது ஏற்படும் சிரமங்கள், பரிசு கொடுப்பதில், பெறுவதில் உள்ள பாகுபாடுகள், பரிசு பெறுவோர் பரிசுகளின் மீது செய்திடும் மதிப்பீடுகள் பற்றி மனம் திறந்து விமர்சித்தும் ,ஊழலுக்கு எதிர்ப்பு, தனி மனிதனிடமிருந்து தொடங்க வேண்டும் எனப் பகன்றும், தனது சமூக அக்கறையினை,
'ஜுனியர் ஜோடி நம்பர் 1', 'எங்கே போகிறோம்?', 'ஊழல் ' என்ற தலைப்புகளில் வெளிப்படுத்துகிறார்.

காரில் இரவில் செல்லும்போது முழு நிலாவைப்பார்த்து இவர் அடைந்த பரவசம், அதன் தொடர்ச்சியாக மனது பின்னோக்கி சென்று அசைபோட்ட இன்ப நினைவுகள், நிலவின் முழு அழகை ரசித்த இடங்கள் என்று தன் இனிய அனுபவங்களை 'பேரழகியுடன் பயணம்' என்ற தலைப்பில் அற்புதமாகப் பகிர்ந்துள்ளார்.