இந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும்
India Nattin Neervalamum Maylanmaium
₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் கே.ஆ. திருவேங்கடசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :222
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415604
Out of StockAdd to Alert List
மழை நிலப்பரப்பின் மீது விழுந்து மண் துகள்களின் இடைவெளிகளின் வழியாக உட்சென்று மேல்மண் பூரிப்படைந்த நிலையில் நீர் உட்செல்களை குறைந்து நிலப்பரப்பின் மீது நீர் செறியும். இவ்வாறு செறிந்த நீர், நில வாட்டத்தின் உதவியால் மேற்கையில் இருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து ஓடைகளின் வழியாக ஆறுகளையடையும். நிலப்பரப்பின் மீது பாயும் நீர், ஓடுநீர் எனப்படும். மண் பூரித்த பொழுது நீர் உட்செல்கை பெருமளவு மட்டுப்படுமாயினும். ஓரளவு நீர் மண்கண்டத்தின் ஆழ்ந்த பகுதியின் பாற்சென்று நிலநீருக்கு ஆக்கமளிக்கும். நீர்த் துளிகள் செறிந்த கார்மேகம் குளிந்ததும், மழையாக நிலத்தின் மீது விழுந்தபின் இது உட்செல்கை, இடைநீர், ஓடுநீர், நிலநீர் எனப் பிரியும். ஓடுநீர் ஆறுகளில் பாய்ந்து நிலவளம் பெருக்கும். மண்கண்டத்தினுள் இறுத்தப்பட்ட நீர் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும். மழை நின்ற பின்னர், ஆற்று நீரோட்டத்திற்கு நில நீர் ஆதாரமாகின்றது. ஒரு நாட்டின் வளம் நீர் வளத்தினால் அமையும். இந்திய நாட்டின் நீர்வளம் பற்றி அறிந்து கொள்வது நாட்டின் பயிர் உற்பத்தி பெருகுவதற்கும் மக்கள் செழுமைக்கும் இன்றியமையாதது. இந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும் இந்நூலில் விளக்கப்படுகின்றது.