book

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்

Jothidam Katru Kollungal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலிப்பாணிதாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :101
பதிப்பு :5
Published on :2018
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of Stock
Add to Alert List

நம் முன்னோர்கள் பலர் நமக்குத் தெரிந்த அரிய கலைகள் பலவற்றை  பிறருக்குக் கற்றுத்தராத  காரணத்தால், அவற்றின் பலன்களை இன்று நாம் அனுபவிக்க இயலாமல் போய்விட்டது. அந்த வகையில் ஆசிரியர் ஜோதிட சாகரம் திரு. புலிப்பாணிதாசன் அவர்கள் தமது நிண்ட ஜோதிட ஆராய்ச்சியின் மூலமும், அனுபவத்தின் மூலமும் ஜோதிடம் சம்பந்தமாக தாம் அறிந்தவற்றை அனைவரும் அறிந்து பயன் பெறும் வகையில் ஜோதிடத்தின் அடிப்படை விஷயங்களை இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார். ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இது ஆரம்பப்பாடம் போன்றதொரு ஆராய்ச்சி நூலாகும். உங்களுடைய ஜாதகத்தை முதலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டு, இந்த நூலோடு உங்கள் லக்கினத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் இந்த கிரகங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள முடியும். யோக கிரகங்கள் எவை? அவை எப்படி எந்த நிலையில் நமக்கு உதவும் சக்தியைப் பெற்றுள்ளன. பாவ கிரகங்களின் சஞ்சாரம் நமக்கு எப்படி எப்படியான கெடுதல்களைச் செய்யும் என்று அறியலாம். இது ஒரு விநோதமான கலையாகும். இதை திரும்பத் திரும்ப படித்து ஒப்பு நோக்கினால், ஜோதிடக் கலையை நீங்களும் கற்றிட முடியும். தெய்வீகமான இக்கலையை மாயை என்று யாரும் ஒதுக்கி விட முடியாது. இது முழுக்க முழுக்க விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கலையாகும். நீல்களே முயன்றால் முடியாத்தொன்றில்லை.

                                                                                                                                             -   புலிப்பாணிதாசன்.