ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு, முத்தாரம், தினத்தந்தி, மாலை முரசு, மாலைமலர் போன்ற பத்திரிகைகளால் பெரிதும் பாராட்டப்பட்டவர். 'ஆவி மனிதர்' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றவர். இந்தியாவின் பல்வேறு
மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்தும், நேரடியாகவும், ஆவிகளுடன் பேச பயிற்சி அளித்து பல்லாயிரக்கணக் கானவர்களை மீடியமாக மாற்றிய சிறப்பு இவருக்கு உண்டு. இந்தியாவில் மட்டுமல்ல, கடல் கடந்தும் இவருக்கு வாசகர்கள் உண்டு. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களுக்கும் இவர் நீண்ட காலமாக உதவி வருகிறார்.
பல்வேறு பத்திரிகைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ள இவருக்கு இது இரண்டாவது நூல். இவர்
எழுதிய முதல் நூல் 'ஆவிகளுடன் நாங்கள்' ஐந்து பதிப்புகள் வெளி வந்துவிட்டது. இந்நூலில் மெய்சிலிர்க்கும் தமது அனுபவங்களையும் கூறி இருப்பதோடு, இந்நூலைப் படிப்பதன் மூலம், அவரவர்களே பிறர் உதவியின்றி வீட்டிலேயே ஆவிகளை அழைத்துப் பேசவும் உதவியிருக்கிறார்.