கல்வி
மேன்மை, பொருளாதார உயர்வு, காரியங்களில் வெற்றி, நோய் நீக்கம் போன்ற மனித
வாழ்வின் உயர் தேவைகளான அனைத்தையுமே இந்த முத்திரை விஞ்ஞானத்தால்
அடைந்துவிடலாம். அதற்கும் மேற்பட்ட இறையருளுக்கும் இந்த முத்திரைகளே
பெருந்துணையாக உள்ளன. நமது முன்னோர்களான சித்தர்களின் மெய்ஞ் ஞானத் தேடலில்
வெளிப்பட்ட அற்புத ரகசியங்கள் இவை. இந்த நூலில், காலையில் கண்விழிப்பது
முதல் இரவு தூங்கச் செல்வது வரையிலான நமது அன்றாடக் கடமைகளைத் திறம்படச்
செய்வதற்கான முத்திரைகள் இடம்பெற்றுள்ளன. அரிய கருத்துகளை மிக எளிமையாக
தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் டாக்டர் ஜாண் பி. நாயகம். அனைவரும்
நல்வாழ்வு பெரும் பொருட்டு இந்நூலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.