போட்டித்தேர்வுகளிலும் நேர்முகத்தேர்வுகளிலும் பொதுவாக நடப்பு அறிவியல் தொழில்நுட்பத்திலிருந்து கேள்விகள் கேட்பது வழக்கம். அதன் மூலம் நீங்கள் எந்த அளவிற்கு சமீபத்திய அறிவியல் தகவல்களை தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்கிறீர்கள் என்பதை சோதிக்க முடியும். அதற்கு தக்கவாறு உங்களுக்கு மத்ப்பெண்கள் வழங்கப்படும். அதனால் அன்றாட அறிவியல் தொழில்நுட்பங்களை ஆழமாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றிபெற சிறந்த வழி. இவற்றுக்கு தினசரி நாளிதழ்களை மட்டும் படித்தால் போதுமா என்றால், நிச்சயம் போதாது. தினசரி செய்திதாள்களில் அறிவியல் சம்பந்தமான துணுக்குச் செய்திகள் மட்டுமே இருக்கும். கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் முழுமையான பின்னணி இடம்பெறாது.