புலிப்பாணி ஜோதிடம் மிக பழமை வாய்ந்தது. இது ஆரம்ப நிலை ஜோதிடம் பயில்வோருக்கு மிக உபயோகமாக இருக்கும். புலிப்பாணி ஜோதிடம் 300 + 2 பாடல் வடிவில் உள்ளது. ஜோதிடத்தை பற்றி மிக விளக்கமாக தனது பாடல் வரிகளில் கூறியுள்ளார்.
முதல் பாகம் - வழிபாடுகள் : கடவுள் வாழ்த்துக்கள் ஆரம்பித்து சக்தியை வழிப்பட்டு ஜோதிடத்தை கற்பிக்க ஆரம்பிக்கிறார் .
இரண்டாம் பாகம் - கிரகங்கள் : பாடல் -3 முதல் 10 வரை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு - கேது வின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகளைப் பற்றிய புலிப்பாணி அவர்கள் சொன்ன விளக்கங்கள் ஆராயப்பட்டு உள்ளது.
மூன்றாம் பாகம் - லக்கின ஸ்தான பலன்கள்: பாடல் -1 1 முதல் 21 வரை லக்கினம் முதல் 12 பாவங்களின் காரகத்துவத்தையும்
நான்காம் பாகம் - லக்கின பொது பலன்கள்: பாடல் -22 முதல் 33 வரை மேஷம் லக்கினம் முதல் மீனம் லக்கினத்தை பற்றியும்
ஐந்தாம் பாகம் - மாந்தி பலன்கள்: பாடல் -34 முதல் 39 வரை மாந்தி 12 வீடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதை பற்றியும்
ஆறாம் பாகம் - கிரகங்களின் ஸ்தானம் பலன்கள் :: பாடல் -40 முதல் 50 வரை 9 கிரகங்கள் 12 வீடுகளில் இருந்தால் என்ன பலன் என்பதை பற்றியும்
ஏழாம் பாகம் - ஜோதிட சூத்திரம் : : பாடல் -51 முதல் 147 வரை நல்ல ஜோதிட குறிப்புகளையும் மற்றும் நல்ல கெட்ட யோகங்களை என்பதை பற்றியும்
சிறப்பாக புலிப்பாணி விளக்கி உள்ளார். ஆரம்ப ஜோதிடம் பழகுபவருக்கு மிக சிறப்பாகவும், புரியும் படியும் பாடல் வடிவில் மிக சிறப்பாக விளக்கி உள்ளார்.
மேலும் இந்த நுலின் மூலம் நமது ஜோதிடத்தின் பழமை நமக்கு புரிகிறது