நவீன தமிழ் இலக்கயத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரேமிள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கிறது."படிமக் கவிஞர்" என்றும் "ஆன்மீகக் கவிஞர்" என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம் இரண்டாயிரமாணுடிது தமிழுகு கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும். "பிரமிள் கவிதைகள்" என்ற இந்த நூலில் பிரமிளின் தனித்துவம் மிக்க கவிதைகள் இடம்பெற்றுள்ளன.தொகுப்பு - காலசுப்ரமணியம்