ஆடம்பரம், அறிவியல் வளர்ச்சி, வீட்டு வசதிகள், வெளி நாட்டு உணவு மோகம் பெருகியவுடன் நமது பாரம்பரிய உணவு, உடல் இயக்கம், குறைந்ததன் விளைவாக தொப்பை பலூன் போல் ஊதுகிறது. ஒபேசிட்டி ஆட்கொள்கிறது. - உடல் பருமனால் அவதிப்படுகிறோம். குண்டு அன்பர்கள் பெருகிவிட்டனர்.
தொப்பை குறைய வழிகாட்டுதல் தேவைப்படும் அளவிற்கு இது ஒரு சமுதாயப் பிரச்னையாகவும் உருவாகிவிட்டது. பஸ்களில், ரயில்களில் இரண்டு பேர் இருக்கை ஒருவருக்கே போதாது என்ற நிலை. தொப்பை கரைய பல இனிய சுபல வழிகளை நூலாசிரியர் இரத்தின சக்திவேல் தமிழக அன்பர்களுக்கு தெள்ளிய தமிழில் அனுபவத்தை இணைத்து அருமையாக விவரித்து உள்ளார்.
- பதிப்பகத்தார்
சென்னை