வேறு குணாதிசயமுள்ள பெண்கள் . மிக நெருங்கிய தோழிகளாகின்றனர் . தங்கள் திருமணம் இருவரின் நட்பிற்கும் இடையூறாக வந்து விடுமோ ...என்ற மனக்கிலேசம் இருவருக்குள்ளும் . இருவரும் நட்பினை தாண்டி உறவாகி விட்டால் ... இந்த முடிவுடன் தோழியின் அண்ணனை தானும் , தனது அண்ணனை தோழியும் மணம் செய்து கொள்ளலாமென்ற முடிவிற்கு வந்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்க , முதலில் ஒரு திருமணம் முடிந்து விட , மற்றொரு திருமணம் நடக்காமல் போக , இப்போது மணம் முடித்த ஜோடியின் நிலை என்ன ? காதலித்த ஜோடியின் நிலை என்ன ? தோழிகளின் நட்பின் நிலை என்ன ? கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள நாவலை படியுங்கள்