கண் கலங்கியவளை எதிரிலிருந்தவள் என்ன சொன்னாளோ, "சாரி அண்ணி. நான் உங்களை விலக்கி வைக்கல. கொஞ்சம் விலகியிருக்கேன். நம்புங்க அண்ணி. சாரி இனி அப்படிப் பேசல. சரி அண்ணன் எப்படியிருக்கான்?” சிறு நிமிட அமைதிக்குப் பின், “அண்ணி ப்ளீஸ் அண்ணன்கிட்ட எதையும் சொல்லிராதீங்க. ஏற்கனவே இழந்தது வரை போதும். செத்துப் போனவள் செத்தவளாவே இருந்துக்குறேன். எனக்காக நியாயம் கேட்டு அண்ணன் கிளம்பினா அவன் உயிருக்கும் ஆபத்து. சொல்ல மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க” என்று நிற்க...