இந்த நாவல், கடலின் உள்ளே மீனவர்கள் நடத்தும் வேட்டையை, அந்த வேட்டையில் அவர்கள் படும் துயரங்களை. அதைத் தாண்டி அவர்கள் நெய்தல் நிலத்தில் வாழும் வாழ்க்கையை, ரத்தமும் சதையுமாக. உயிரும் உணர்வுமாகப் படைத்துள்ளது. கடற்புற மக்களின் பண்பாட்டுக் கூறுகளை நுட்பமாக சித்தரிக்கிறார். பெர்லின். கடல் மக்களுக்கும் கடலுக்குமான உறவு. கடல் மக்களுக்கும் மீனுக்குமான உறவு, கடல் மக்களுக்கும் கரை மக்களுக்குமான உறவு. கடல் மக்களுக்கும் மாதாவுக்குமான உறவு எல்லாமே நாவலில் சித்தரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
-பொன்னீலன்