வாழ்க்கையில் எத்தனை அடிகள் விழுந்தாலும் எழுந்து நிற்போம் என்ற நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது.ஒரு பாம்பை அடிப்பதற்குப் பலர் கைகளில் கம்புகள் இருக்கலாம். எத்தனைபேர் அடித்தாலும் அடிகள் படாமல் வளைநுத் நெளிந்து புற்றில் நுழைந்துவிடும் தன்மை பாம்புக்கு உள்ளது. உடல் அழிந்து போகலாம். ஆனால் அறிவு அழிந்துபோகாது. கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களின் காலம் முடிந்துபோகலாம். ஆனால் அவர்கள் கற்றுத்தந்த கல்வியைக் காலத்தால் அழிக்க முடியாது. படப்பட பட்டுப்போகக்கூடாது. பட்டறிவால் பிறரைப்பட்டை தீட்டமுயலவேண்டும். சாதனையாளர்களின் வரலாறு நெஞ்சில் வரையப்படும்போது சாதனை படைக்கவேண்டும் என்ற வீச்சுத்தன்மை பட்டொளி வீசிக்கொண்டேயிருக்கும்.
- பதிப்பகத்தார்.