ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளைக்கு அரைத் தேக்கரண்டி மருந்து வீதம் காலை -பகல்-இரவு உணவுக்கு முன் ஒவ்வொரு தேக்கரண்டி தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும்.ஆரோக்கியம் மனிதனின் அற்புதச் சொத்து - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பிணியில்லாமல் வாழும் வழி தெரிந்தால் அறுவைச் சிகிச்சைச் செலவைக் குறைக்கலாம். இந்நூல் அதற்கான வழிகளை, உத்திகளை சிறப்பாக அற்புதமாகச் செலவில்லாத இலகுமுறையில், எளிய முறையில் விவரிக்கிறது - நம் வீட்டில் இருந்தபடியே பிறர் உதவியின்றி பல நாள்பட்ட பல காலம் பிணிகளால் அவதிப்படுபவர்கள்கூட மாத்திரையில் இருந்து விடுதலை பெறும் அற்பதுக் கலையை ஆசிரியர் மிக இணக்கமாக இலகுவாக தமிழக மக்களுக்கு அவருடைய அனுபவ அறிவின் வாயிலாக அருமையாக முரசு அடித்து அறிவுறுத்துகிறார். இதன் மூலம் இழந்த ஆரோக்கியத்தை விரைந்து பெறுவதுடன் மாத்திரைகளின் தாக்கத்தில் இருந்து உடனடியாக விடுதலை பெறலாம்.