நவரத்தினங்களால் நாம் அடையும் நன்மைகள் பலப்பல. அழகுக்காகவும் பெருமையைக் காட்டிக் கொள்வதற்காகவே நவரத்தினங்களை ஆபரணங்களில் நாம் அணிந்து வந்தோம். ஆனால், அந்த நவரத்தினங்கள் நமக்கு அளப்பரிய நன்மைகளைவாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் இப்போது பரவலாக அறிந்து கொண்டுவிட்டோம். எனினும் அவற்றால் என்னென்ன நன்மைகளை அடைய முடியும்,எவ்வாறு அவற்றை அடைவது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. அந்த விவரங்களைத்தான் ஆசிரியர் இந்நூல் மூலம் நமக்குச் சொல்லித் தருகிறார்.