வரலாற்றுப் பொருள்முதல்வாத வரிசையில் சோசலிசத்தின் வருகைக்கு முன்னதாக முதலாளியம் என்ற சமூக அமைப்பு அவசியமா? செட்ரிக் ராபின்சனின் இந்த இற்றைக் கேள்வியின் மூலம் கம்யூனிஸ்டுகளின் அரசியல் நடைமுறை திகிரா தீவிரப்படுத்தப் படுகிறது. இன்றைய போராளிகளின் உலகில் மார்க்சியத்தின் வியூகம் மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது.
11, 12, 13 ஆம் நூற்றாண்டுகளை நோக்கி செட்ரிக் ரொபின்சன் (1940-2016) திரும்பிச் செல்கிறார் சோசலிசத்தின் குருத்துக்கள், அதன் முன்வடின்னேன் அங்கலைகளி தான் முகம் நாட்டி எழுச்சி அடைந்தன. ஃபிரான்சிஸ்கன் இயேசு பங்கர்கள் இன்னும் பல அணிகள் முன்னுக்கு வந்தனர். அமெரிக்கப் போராட்ட மரபை கறுப்பினப் போராட்டங்களிலிருந்து வருவிக்கிறார் ராபின்சன் இன்றைய இருட்டு நெருக்கடிகளின் ஊடே சோசலிசம் ஒரு தோற்றுப்போன திட்டம் வன் ஒதுக்கப்படும் மேற்கத்திய முயற்சிகளைத் தாண்டிர் செல்லும் பாதை இது எனக் காட்டுகிறார்.
முதலாளியத்திற்கு முந்திய இடைக்கசோசலிசத்தைக் கற்பனாவாத சோசலிசம் டோபியர் என்று மார்க்சியர்கள் குறைத்து மதிப்பிடுவதை. நிராகரிப்பதை செட்ரிக் ராபின்சன் மறுபரிசீலனை செய்யுமாறு கோருகிறார். அது Formative Socialism உருவாகும் சோசலிசம் என்று ராபின்சன் அழைக்கிறார். இடைக்கால சோசலிசத்தின் அறப்பண்பு, அமைதி நோக்கு, கூட்டு வாழ்வியல் ஆகியவை பிற்கால சோசலிசத்திற்குப் பலம் வழங்கக்கூடியவை என்று ராபின்சன் வாதிடுகிறார். மாறாக நவீன கால முதலாலியம் வன்முறையும் எந்திரமயமாக்கலும் கொண்டது என்று மசிக்கிறார். உழைக்கும் மக்களைக் கொடூரமான அடிமைத்தனத்திற்கு ஆப்படுத்தியது முதனளியமே என்று குற்றம் சாட்டுகிறார்.
இடைக்கால விவசாயக் கலாச்சாரம் மென்மையானது: இயற்கை சார்ந்தது.இயற்கை விவசாயம் மாச்சாரம் ஆகியவற்றின் மீது கட்டப்படும் சோசலிசமே அடிப்படையில் மானுடப் பண்பு கொண்டது என்று செட்ரிக் ராபின்சன் சுட்டிக்காட்டுகிறார். நவீன காலத்தி பல அறிஞர்களால் வலியுறுத்தப்படும் முதனாளியமல்லாத வார்ச்சிப் பாதை மிகக் குறிப்பான முதனளளிய எதிர்ப்பு ஆகியன ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அதிகப் பொறுத்தமானவை என்கிறார்.
செட்ரிக் ராபின்சனின் கருத்து நிலைகளை உபனடியாக நாம் ஏற்றுக்கொள்ளாவிடினும். முதலாளித்துவத்தின் ஆக்கிரமிப்பு பண்பினை விமர்சன நோக்கில் பரிசீலிக்கவும் சோசலிசத்தைப் பசுமை நோக்கிலும் இயற்கை சார்ந்த கோணத்திலும் அணுகுவதற்கும் இது பயனுள்ளதாக அமையலாம்.