மனித வாழ்க்கை என்பது சதாகாலமும் கவலையும் போராட்டமும் வேதனையும் கொண்டதாகவே காணப்படுகிறது. கொஞ்சம் சுகம், மலையளவு துன்பத்துடன் கலந்தே காணப்படுகிறது. இத்தகைய துன்பத்தை மன அமைதி மூலமே நீக்க முடியும். மன அமைதிக்கு தியானமே சிறந்தது. ஆழ்ந்த தியான நிலை சில நாட்களிலும் வரலாம், சிலருக்கு சில மாதங்கள், சில வருடங்கள் எனவும் நீண்டு போகலாம். வாசகர்கள் மிகவும் பொறுமையைக் கடைப் பிடித்தல் அவசியம் நான் நீண்ட காலமாக தியானத்தை கடைப்பிடித்து வருபவன். தியானம் மூலம் நான் பெற்ற மனஅமைதியை எல்லோரும் பெற வேண்டும் என்று இந்நூலை எழுதியுள்ளேன்.