இட்லி தந்த மன உறுதி!
வருவிருந்து வைகலும் ஓம்புவன் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
- தன்னை நாடி வந்த விருந்தினை நாள்தோறும் உபசரிப்பவன் வாழ்க்கை, வறுமையுற்று வருந்திக் கெடுவதில்லை.
வாழ்க்கை தனக்குக் கற்றுக்கொடுத்தப் பாடத்தைப் பலரிடமும் பகிர்ந்துகொண்டால் நாளை.. நான்கென்ன, நாற்பதென்ன, ஆயிரக்கணக்கான விட்டல் காமத்துகள் உருவாகலாம் என்ற நம்பிக்கையுடனஉம் எதிர்பார்ப்புடனும் இந்த நூல் மூலமாக ராஜபாட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விட்டல் வெங்கடேஷ் காமத்.
இது ஒரு சுயசரிதை. மும்பையிலும், இந்தியாவெங்கும், உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 400 ரெஸ்டாரென்ட்டுகளையும், மூன்று மற்றும் நான்கு நட்சத்திர ஹோட்டல்கள் பலவும் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் ஹோட்டல் அதிபரின் சொந்தக் கதை. மும்மை விமானநிலையத்துக்கு எதிரில் பிரமாண்டமாக எழும்பி நிற்கும் 'தி ஆர்கிட்' என்னும் எக்கோட்டலை நிறுவி, உலகையே திரும்பி பார்க்க வைத்தவரின் பிசினஸ் கதையும்கூட.
தனது கதையை விட்டல் நேர்மையாக பதிவு செய்திருப்பது இந்த நூலின் சிறப்பு.
'விட்டல் வெங்கடேஷ் காமத், 'IDLI, ORCHID AND WILL POWER!' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, சற்றும் சுவை குன்றாமல் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம்.
வாழ்வில் முன்னேறத்துடிக்கும் அனைவருக்கும் உற்றத் துணையாக இருந்து நல்வழி காட்டும் யதார்த்தமான, எளிமையான நூல்களின் வரிசையில் இந்த நூல் முக்கிய இடம் பெறும்.
-ஆசிரியர்