தமிழ் இலக்கண ஆய்விற்குப் பொது மொழியியல், திராவிட மொழியியல் ஆய்வுகள் மிகவும் இன்றியமையாதவை என்பதை எழுத்தியல் தொடர்பான ஒன்பது கட்டுரைகள் வாயிலாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பாக இளைஞர்கள் மொழியியல். ஒப்பிலக்கியக் கோட்பாடு, மானுடவியல், சமுதாயவியல். தொல்பொருளியல், உளவியல் கோட்பாடு போன்றவற்றுடன் தமிழைத் தொடர்புபடுத்தி ஆராய வேண்டும். தமிழரின் தொன்மையும் பகுத்தறிவுப் பார்வையும் இப்போது அறியப்பட்டுள்ளவற்றைவிட இன்னும் பன்மடங்கு இருப்பதை இந்நூல்வழி அறிந்து கொள்ளலாம்.