வின்சென்ட் சர்ச்சில் என்றால் எல்லாருக்கும் நினைவில் வருவது வெற்றியின் சின்னமான 'V' யைக் குறிக்கும் வகையில் கை விரல்களை அடையாளம் காட்டியதும் வாயில் சுருட்டுடன் அந்த உருண்டையான முகமே நம்முன் தோன்றும். பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அரசியல் வானில் முரண் மூட்டை களின் மொத்தத் தொகுப்பு என்றும் சொல்லலாம். ஆயனும் சிறந்த பேச்சாளராய், எழுத்தாளராய் இலக்கியவாதியாய், அரசியல் வித்தகராய், ஒரு தேசத்தில் பிரதமராய் வலம் வந்ததோடு மக்களின் தலைவராய் வலம் வந்தவர். நோபல் பரிசு பெற்ற முதல் உலகத் தலைவர் என பன்முக தோற்றம் கொண்ட ஒரு பெருந்தகை என்றால் மிகையல்ல.