தோட்டத்தின் வேலி பக்கத்தில் சிறு செடிகள் இருத்தது. அதன் இலைகள் முள்ளங்கி இலைப் போல இருத்தது. குமுதினியின் கண்கள் அந்த இலைகளைப் பார்ப்பதை, பார்த்த தோட்டக்காரர், ''பாப்பா இந்த கீர பேரு காசினி கீர. இது எல்லா மண்ணுலயும் வளரும் வீட்டுல கூட வளர்க்கலாம். மருந்துக்குகூட இந்த கீரய எடுப்பாங்க.''