தாகூர் மிகச்சிறந்த மனிதாபிமானி நல்லனவற்றைத்திறந்த உள்ளத்தோடு வரவேற்கும் சான்றின்மை அவரிடம் இருந்தது. அவர் ரஷ்யாவில் கண்ட வியத்தகு சாதனைகளைத் தம் நண்பர்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கடிதங்கள் வாயிலாக அறிவித்தார். இவை இலக்கியச் செறிவு உடையவை. இந்திய மொழிகள் பலவற்றிலும், மொழிபெயர்க்கப்பெற்று நூல் வடிவில் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை தமிழில் வெளிவரவில்லை. வங்கமொழி மூலத்திலிருந்து அன்பர் திரு. சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நல்ல, எளிய, இனிய தமிழில் படிக்கத் தூண்டும் வேகமான நடையில் ஆக்கித் தந்துள்ளார்.