நமது சித்த மருத்துவத்திற்குத் தேவையான மூல மருந்துப் பொருள்கள் அனைத்தும் நமது கண்முன்னே காடு, கழனி, வாய்க்கால் வரப்பு, ஆற்றங்கரை என நம் வீட்டைச்சுற்றி உள்ள முள் வேலிகளிலே கூட மிக தாராளமாகக் கிடைக்கக் கூடியவை.
மளிகைக் கடைகளிலே கிடைக்கக்கூடிய பொருள்கள் ஏராளம். இத்தகைய மூலப் பொருள்களை எவ்வாறு சுத்தம் செய்வது என்ற தெளிவான தகவல் இப்புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.