நூலின் முதல் பகுதியிலுள்ள கட்டுரைகள் செயல்பாட்டிலிருந்து உருவான கோட்பாடுகளின் குறிப்புகளைக் கொண்டிருக்கின்றன. இரண்டாம் பகுதி சினிமாவைச் சார்ந்த அறிமுகங்களின் உறவுகளின் நினைவுகூரல். ஒரு கலையின் வரலாறு என்பது நிறுவப்பட்ட கருத்துகளின் தொகுப்பு அல்ல; அதில் இயங்கியவர்களின் மனமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் இழைந்து பின்னப்பட்டது என்ற நிஜத்தை முன்வைக்கிறது.