'புத்தம்வீடு' - எளிய மொழியில் சொல்லப்பட்ட காதல் கதையாகத் தொற்றம்கொள்ளும் நாவல். இது லிஸியின் கதைர மூன்று தலைமுறைகளை இணைக்கும் கண்ணி அவர். அவளை மையமாகக்கொண்டு விரியும் கிராம உறவுகளின் கதை. ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிப்படும் அவளுடைய சிநேகச் சரடின் மறுமுனையில்தான் அவளைத் தூற்றியவர்களும் விரும்பியவர்களும் இயங்குகிறார்கள். படைப்பு இயல்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட இலக்கிய ஆக்கங்களில் ஓன்று 'புத்தம் வீடு'. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்டது. எனினும் இன்னும் வாசிப்பில் சுவை குன்றாமல் துலங்குகிறது.