போர்க்காதல் ;புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தாய்நாடு, தாய் மொழி மேன்மையடையவும் சமூகப் பொருளாதாரச் சமநிலை காணவும் இனவேறுபாடு, உயர்வு தாழ்வு நீங்கவும் மகளிர் முன்னேற்றம்.பெண் கல்வி வலியுறுத்தியும் எண்ணற்ற ஒப்பற்ற கவிதைகளையும் காவியங்களையும் படைத்துள்ளார். அதனாலன்றோ அவரின் புகழ் குன்றின் மேலிட்டவிளக்காக
இன்றும் ஒளிர்கின்றது.அழகின் சிரிப்பு, இருண்டவீடு, குடும்ப விளக்கு போன்றவை அவரின் புகழ்பெற்ற இலக்கியங்களாகத் திகழ்கின்றன.அவர் தமது முதுமைகாலத்தில் எழுதிய பல நாடக இலக்கியங்களில் முழுமைபெறாமல் கையெழுத்துப் படிகளாக மட்டுமே இருந்த நான்கு நாடகங்களைப் 'போர்க்காதல்' என்னும் தலைப்பில் திரு.மன்னர்மன்னன் அவர்களை வெளியிட்டுள்ளார்.
பெண்கல்வி, பெண்ணுரிமை போன்ற முற்போக்கு சிந்தனை, மூடப்பழக்க வழக்கங்கள்,சமயஞ் சார்ந்த இழிநிலைகள் போன்றவற்றை அம்பலப்படுத்துகிறது. மாணவர்கள் பங்கேற்று நடிப்பதற்கென்றே எழுதப்பெற்ற இந்நாடகம் கவிதை நடையில் இலக்கியச் சுவைகளில் தினைக்கச் செய்யும் வண்ணம் இயற்றப்பட்டுள்ளது