அட்லாண்டிக்கின்;' பெர்முதா முக்கோணம்' என்பது பள்ளி மாணவர்கள் வரையும் செங்கோணமுக்கோணம் அல்லது சம பக்க முக்கோணம் அல்லது விரிகோண முக்கோணம் போன்றதுஅல்ல.இன்றைய மனித நாகரிகத்தின் சாதனைகளையே உச்சகட்ட அறிவியல் சாதனைகளாக்க்கருதி வருகிறோம். ஆனால் அப்படியல்ல நம்மை விட நாகரிகம் அடைந்த மக்கள் நமக்கும்
முன்பே இதே பூமிப் பந்தில் வாழ்ந்திருக்கிறார்கள். பல நாகரிகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன.இவையெல்லாம் ஆழ்கடல் அகழ்வாய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளன. நாம் வாழும்தரைப்பகுதியைக் காட்டிலும் பல மடங்கு பெரியது கடல்- பரந்து பட்டது.ஆழ்கடல் பகுதிகளில்மனிதர்கள் இறங்கி ஆய்வு செய்வதற்கு இன்று பல கருவிகள் வந்துவிட்ட போதிலும் ஆழ்கடலுக்குள் இயற்கைத் தடைகள் பல உள்ளன.தங்கள் உயிரையே பணயம் வைத்து ஆழ்கடல்பற்றிய சல உண்மைகளை அவனிக்கு எடுத்துக் கூறியவர்களும் உண்டு.பெர்மிதா முக்கோணப்பகுதியில் மாயமாய் மறையும் கப்பல்கள் மற்றும் விமானங்களைப் பற்றிக் கூறிய போது பலரும்நம்ப மறுத்துவிட்டனர்.காரணம் இந்த அறிவியல் யுகத்தில் கூட இந்தப் புதிர் தீர்க்கப்படாமல்உள்ளதே என்பது தான். அதுவும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அண்மையில் இருக்கக்கூடியஅட்லாண்டிக் கடலில் உள்ளதாக்க் கூறப்படும் மர்ம்ம். எல்லா தரப்பினரும் படித்து அறிந்துகொள்ளும்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
- சேலம் un.அன்பரசு.