இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு
இந்தியச் சிறுவனும் வெகு இயல்பாக கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறான்.
ஊருக்கு நான்கைந்து கிரிக்கெட் அணியை நம்மவர்கள்
நடந்திக்கொண்டிருக்கிறார்கள். கூட்டு விளையாட்டான கிரிக்கெட் பல
மனிதர்களையும் உணர்வுபூர்வமாக பிணைக்கிறது. எவ்வித சுய அடையாளமுமற்று
கிரிக்கெட் என்ற சங்கிலியால் இந்தியர்கள் இணைகிறார்கள். கிரிக்கெட் இந்திய
மக்களிடம் உணர்வுகளுடன் நேரடியாக தொடர்புடையது. கிரிக்கெட் வீரர்கள்
நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள்.