book

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ.மு. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2010
ISBN :9789388428781
Add to Cart

சிவஞான போதச் சாரம்.

சித் + அந்தம் – சித்தாந்தம். சித் என்றால் அறிவு.அந்தம் என்றால் முடிவு. ஆகவே சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மையாகும். சிவனை வழிபடுவோரின் சமயம் சைவ சமயம். சிவநெறி குறித்துச் சிந்தையில் செய்து கொள்ளப்படும் முடிவே சைவ சித்தாந்தம் எனப்பட்டது.

மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் என்னும் நூல் சைவ சித்தாந்தத்தை மிகச் சிறப்பாக விளக்கும் நூலாகும். பதிப் பொருளாகிய இறைவனது ஆணையையே துணையாகக் கொண்டு நீர்வழிப் படும் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படும் திறத்தினை -- அதாவது கேவலத்தில் உறங்கிக் கிடந்த உயிர்கள் பிறவிக்கு வந்து முடிவில் இறையருளில் கலக்கும் நீண்ட நெடிய பயண வரலாற்றினைக் கூறுவதே மெய்கண்டார் அருளிய 'சிவஞான போதம்' என்ற நூலாகும். அந்த நூலுக்கு மிகச் சுருக்கமான , எளிய உரையாக இந்நூல் அமைகிறது.

சைவ சித்தாந்தம் பற்றிய அடிப்படைச் செய்திகளையும் சிவஞான போத நூல் உணர்த்தும் கருத்துகளையும் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்க்கு இது ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என நம்புகிறேன். இந்நூலைப் படிப்பவர் நிச்சயம் சைவசித்தாந்தம் பற்றிய அடிப்படை அறிவைப் பெறுவர் என்பது உறுதி.

நூலாசிரியர்: திருமதி. ஞானப்பூங்கோதை சுப்பிரமணியன்.
B.Sc(வேதியியல்), M.A.(தமிழ்), M.A.(ஆங்கிலம்.),M.Ed.
1996இல் தினகரன் பத்திரிகை, கடலூர் மாவட்டத்தில் சிறந்த தமிழாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்தது