அமைப்பியல் கோட்பாடும் ஆய்வுகளும்
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞா. ஸ்டீபன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123425139
Add to Cartகதைகளின் அமைப்பை எவ்வாறு கண்டறிவது என்றால் ஒவ்வொரு கதையையும் உறுப்புகளாகப் பிரித்தல், ஒன்றின் உறுப்புகளை மற்றொன்றோடு ஒப்பிடல், சில மாறாமல் இருப்பதையும், சில உறுப்புகள் திரும்பத் திரும்ப வருதல், சில உறுப்புகளுக்கு எண்ணற்ற பதிலிகள் வந்தமைதல், இவற்றைத் தர்க்கத்தின் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று ஒப்பிடுதல், இதன் விளைவாக சில நிலையான சில உறுப்புகள் ஒன்றோடொன்று உறவு கொண்டு முழுமையை உருவாக்குகின்றன என்று மிக எளிதாக கதைக் கூறன்களைப் பிரிப்பது பற்றியும் இப்பகுதியில் விளக்கிச் செல்கின்றார். மேலும் இக்கதைகள் தம்மளவில் முழுமையானவை, தனித்து நின்று (உருபன் போன்று) பொருள் தரும் இயல்புடையவை என்று கூறும் ஆசிரியர் இலக்கிய வகை ஒன்றின் அமைப்பைக் கண்டுபிடிப்பதற்கு எவை மாறாதவை, எவை மாறுபவை என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பிராப் ஆய்வு செய்துள்ள சில கதைகளில் உள்ள வாக்கியங்களை எடுத்துக் கூறி அவற்றில் மாறாது நிலைத்து நிற்கும் கூறு எது? என்றும் அடையாளம் காட்டுகிறார்.
இக்கதைகளில் வரும் ஒரு வினையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைகளோடு உறவு கொண்டு ஓர் ஒழுங்கமைப்பை உருவாக்குவதையே மொழியியலில் ‘தொடர்பாட்டு உறவு’ (Syntagmatic relations)) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படை வரையறை என்கின்றனர். இங்கு பிராப் கதைகளில் மாறாமல் இருக்கும் உள்ளார்ந்த கூறுகளை வினை என்றும், கதைகளின் அமைப்பைக் கண்டறிவதற்கு இதுவே அடிப்படை அலகு என்றும் வரையறை செய்கின்றார்.