book

அகத்திற்குள் புறம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. பெரியசாமி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

மக்களின் வாழ்க்கை முறையினைப் பிரதிபலிப்பதே இலக்கியம். இலக்கியம் வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். அந்த இலக்கியம்தான் மனிதகுலம் உள்ளவரையிலும், மக்களின் மனதிலும் வாழும். அப்படி வாழும் இலக்கியம் தான் சங்க இலக்கியம். அவை அக இலக்கியம், புற இலக்கியம். அகம் பண்பாட்டோடு தொடர்புடையது. புறம் - நாகரிகத்தோடு தொடர்புடையது. அகம். காதலுக்கும், புறம் வீரத்திற்கும் உரியது. வாழ்க்கையின் தொடக்கமே காதலில் தான் ஆரம்பிக்கிறது. அந்தக் காதல் கைகூடி வாழ்க்கையை வாழத் தொடங்கும் போது தான், வாழ்க்கைப் போராட்டமும் தொடங்குகிறது. அப்போராட்டத்தை வெல்லுவதற்கு முதலில் தேவைப் படுவது வீரம். புறச்செய்திகள் அனைத்தும் இதற்குள் அடக்கம்,
அகத்தை வெளிப்படுத்துவதே புறம் தான். புறநிகழ்வுகள் அனைத்திற்கும் அகமே காரணம்.
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்" "நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” "உண்டாலம்ம இவ்வுலகம்” "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” "எவ்வழி நல்லவர் ஆடவர்,அவ்வழி நல்லை வாழிய நிலனே”
என்கிற பாடல் வரிகள் அகத்தின் வெளிப்பாடே. அதன் காரணமாகவே இந்நூலுக்கு "அகத்திற்குள் புறம்” எனத் தலைப் பிடப்பட்டது. அகத்திற்குள் புறத்தைப் பற்றி ஆராய சில பாடல்களே எடுத்துக் கொள்ளப்பட்டன.