book

மரங்கள் தரும் வரங்கள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டத்தி மைந்தன்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

வெயிலில் இருந்து தப்பிக்க, கோடை நிழலுக்கு வேம்பு, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம் வளர்க்கலாம். நகர் பகுதியோ, கிராமப்புறமோ ரோட்டோரத்தில் புளி, வாகை, செம்மரம், ஆலமரம், அத்தி, அரசமரம் வளர்க்கலாம். மரக்கன்று 2 அடி உயரம், கிளை வேர்களுடன் இருக்க வேண்டும். வெயில் படும் இடத்தில் நட வேண்டும்.தரைமட்டத்தில் இருந்து வேர் ஒரு அடி ஆழத்தில் நடவு செய்தால் ஈரப்பதம் கிடைக்கும், வேகமாக வீசும் காற்றை கூட தாங்கி வளரும். உயிர் உரங்களை வேருக்கு இடுவதாலும் வறட்சியை தாங்கி வளரும். பஞ்சகாவியம் கரைசலை தெளித்து வந்தால் வறட்சியை தாங்குவதோடு, பூச்சி, நோய் தாக்குதலின்றி நன்கு வளரும். கோடை காலத்தில் பக்க கிளைகளை வெட்டி விட வேண்டும். அதன் மூலம் நீராவி போக்கு அதிகரித்து மரங்கள் காய்ந்து இறப்பதை தடுக்கலாம்.சராசரியாக சில வகை மரங்கள் 25 அடி வரையும், காடுகளில் வளரும் மரங்கள் 300 அடி உயரம் வளரும். சில வகை மரங்கள் 150 முதல் 500 ஆண்டுகள், காடுகளில் வளரும் மரங்கள் 2 ஆயிரம் ஆண்டுகள் வரை வாழும்.செம்மண், கரிசல் மண்ணில் வளர்க்கப்படும் மரங்கள் வேகமாக வளரும். மரம் வளர்ப்பில் மிக முக்கியமானது நீர் மேலாண்மை. மரத்தை சுற்றி சிறிது குழி அமைத்து மழை நீர் தேங்கும் படி செய்ய வேண்டும். வீட்டில் வீணாகும் தண்ணீர் நேரிடையாக மரத்திற்கு கிடைக்கும் வகையில் வரப்பு அமைக்க வேண்டும்.