அறஇயலும் பண்பாடும்
₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.ச. முத்துலட்சுமி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :220
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788188048342
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart''அற இயலும் பண்பாடும்'' என்னும் இந்நூல் நீதி என்பதற்கும் அறம் என்பதற்கும் உரிய வேறுபாடுகளை உணர்த்துகிறது. அறத்தின் இலக்கணம் விளக்கம், இயல்புகள் ப்ற்றி எடுத்துக் கூறுகிறது. அறம் என்ற சொல் நற்பண்பு அல்லது ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களில் வழங்கப்பெற்றிருக்கிறது. நல்லவையெல்லாம் கடமை என்றே கருதப்படுகிறது. ஈகை அறச் செயல்களுள் முதன்மையானது. அறத்தின் பயன் புண்ணியம் என்று கூறுவது மரபு. அறக்கடவுளை நடுநிலைமை பிறழாத தெய்வமாகப் பண்டைத் தமிழ் மக்கள்போற்றிவந்தனர். அறம் என்ற சொல்லுக்குரிய பொருள் பல்வேறு வகையாகப் பிற்கால மக்களுடைய மனநிலைக்கும் பழக்க வழக்கங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற வண்ணம் மாற்றமும் வளர்ச்சியும் அடைந்துள்ளது. '' தீயவற்றை அறுத்தெறிவது அறம்'' என்றும் கொள்ளப்படுகிறது.
ஆன்மாவைப் பற்றிய பண்பாடு என்பது பழக்கவழக்கங்கள். சட்டதிட்டங்கள, கொள்கைகள், மனப்பான்மைகள். கலைகள் போன்றவற்றை விளக்குகிறது. ஒரு சமூகம் எவ்வாறு தன் வாழ்க்கையை நடத்துகின்றதோ அதுவே அதன் பண்பாடு இதுவென்று காட்டுவதாகும். பொருளாதாரத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் முன்னேற்றம் அடைந்த சமூக மிக உயர்ந்த பண்பாடு உடையதாகக் கருதப்பெறும்.