காமகோடி ராமகோடி
₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா. கணபதி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :140
பதிப்பு :3
Out of StockAdd to Alert List
இதை நான் எழுதினேன் என்று சொல்வதைவிட, இதை என்னால் எழுதாமலிருக்க
முடியவில்லை என்பதே உண்மை. எதுவோ ஒன்று இதிலே என் கழுத்தைப் பிடித்துத்
தள்ளியது சென்ற (1975) மார்ச் மாதத்தில்.
அப்போது ஸ்ரீ ராம நவமிச் சிறப்பு மலர் வெளியிடும் ஒரு சமாஜத்தினர்
என்னிடம் விஷயதானம் கேட்டனர். :"என்னால் இப்போது போதேந்திராளைப்
பற்றித்தான் எழுத முடியும். அது எவ்வளவு நீளம் போகுமோ எனக்கே தெரியாது.
நான் எழுதுகிறபடி எழுதித் தருகிறேன். உங்கள் ஸஞ்சிகையில் எவ்வளவுக்கு இடம்
கொடுக்க முடிகிறதோ, அவ்வளவை மட்டும் பிரசுரித்துக் கொள்ளுங்கள்" என்றேன்.
எனக்கே நான் சொன்னது விசித்திரமாக இருந்தது! ஆனால் ஸமாஜத்தினருக்கு
விசித்திரமாக இல்லை. "அப்படியே செய்கிறோம்" என்றனர்.
எழுதத் தொடங்கினேன். அது பாட்டுக்குப் போய்க் கொண்டேயிருந்தது. ஆம்,
பரம அநுகூலமான காற்றிலே பாய் மரத்தை விரித்துக் கொண்டு ஹாய்யாக எழுதினேன்.
கலவையிலிருந்துதான் (ஸ்ரீ மஹா பெரியவாள் அக் காலத்தில் தங்கியிருந்த இடம்)
இப்பேற்பட்டதொரு தென்றல் வீசமுடியும்! அதன் காரணமற்ற ஸௌக்கிய வீச்சை
முன்பும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது போல் அதன் இடைவிடா இயக்கத்தை
என்றுமே கண்டதில்லை.
நான் எழுதிப் போட்ட கத்தையில் ஏறத்தாழ ஐந்திலொரு பகுதியை மட்டும்
ஸமாஜத்தினர் சிறப்பு மலரில் வெளியிட்டனர். இதை அரை குறை வேலை என்று எவரும்
சிரிக்காமல், அந்தப் பகுதிக்குள்ளேயே ஒரு தன்னிறைவு இருந்ததாகக் கூறியது
இன்னொரு விசித்திரம்.