book

திருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.ச.ஞானசம்பந்தன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :406
பதிப்பு :5
Published on :2016
Add to Cart

"பேராசிரியர் அ.சா.ஞா. அவர்களின் இறுதி நாட்களில் எழுதிய நூல்களிலே ஒன்று. "திருவாசகம் சில சிந்தனைகள் என்பதாகும். ஏறக்குறைய இரண்டாயிரம் பக்கங்களில் திருவாசகத்துக்கு அமைந்த 'உரை இது. உரையென்றால், செய்யுளுக்குச் சொற்பொருள் தருவ தோடு அமைந்து விடும்; ஆங்காங்கே இ ல க் க ணக் குறிப்புகளும் பதசாரமும் உரைகளில் எதிர்பார்க்கலாம். அ, ச ஞா வி ன் திரு வாசகச் சிந்தனைகள் பதவுரை பொழிப் புரை என்ற செயற்கையான மரபு வழியில் எழுதப்படவில்லை , இலக்கிய மரபிலும் சமய மரபிலும் இன்றைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிந்தனை களை மணிவாசகர் திருவாக்கு வாயிலாக விளக்கியிருப்பது இந்தப் பணியின் சிறப்பாகும்." திருவாசகத்தில் அமைந்துள்ள முதல் நான்கு அகவல்கள் இறைவனது பெருமை பேசுதல், அவன் அடிகளாருக்கு அருள் செய்தமைபற்றிப் பேசுதல், அவனுடைய எளிவந்த தன்மைபற்றிப் பேசுதல் ஆகிய வற்றை உள்ளடக்கி நின்றன. நான்காவதாகவுள்ள போற்றித் திருஅகவல் ஆன்ம யாத்திரையின் குறிக்கோள், அவன் அருளைப் பெறுதலே ஆகும் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டு, அந்த அருளைப் பெறுவதற்குரிய வழியையும் ‘போற்றி, போற்றி' என்று கூறுவதன்மூலம் எடுத்துக் காட்டுகின்றது. திருச்சதகம் தொடங்கி, அச்சோப் பதிகம் முடிய உள்ள பகுதிகளில் நான்கு, ஆறு, எட்டு அடிகள் கொண்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சதகப் பாடல்கள் நூறும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பெற்றுள்ளன. இவற்றில் முதல் பத்துப் பாடல்கள் கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை.