book

மாயப் பூக்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கௌதம் குமார்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :2
Published on :1999
Add to Cart

என் கனவில் கண்ட கதை,
நள்ளிரவு நேரம் கோபத்தின் உச்சத்தில் பெரிய சூழாயுதத்தால் ப்ரீத்தியை தாக்க வந்தான் சேகர் ப்ரீத்தி சிறிதும் பயப்படவில்லை, அவர்களை சுற்றி இருந்த ஆட்களும், அவளது அண்ணன் ரகுவும், பாட்டி காமாட்சியும், மந்திரவாதியும் சேர்ந்து சூழாயுதத்தையும், சேகரையும், பிரிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவன் கண்களில் கோபக் கனல் வெடித்துக் கொண்டிருந்தது. அவளின் கதையை இப்போதே முடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் அவன் வார்த்தைகளில் தென்பட்டது. ஊருக்கு வெளியில் நடுக்காட்டில் இருந்த அந்த பழைய வீட்டின் வாசலில் நடந்துகொண்டிருந்தது இந்தப் பெரிய சண்டை.