book

தமிழ்திரைப்பட வரலாறு

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முக்தா. சீனிவாசன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு, சலனப்படங்களே அன்று திரையிடப்பட்டன. இது நடந்த இடம் ரிப்பன் கட்டிடத்திற்கு அடுத்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில்தான். சினிமாஸ்கோப் என்று விளம்பரப்பட்டிருந்த அந்த காட்சி, ஒரு மாபெரும் கலாச்சார தாக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல சலனப்படக் காட்சிகள் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இக்காட்சிகளுக்கு நாளடைவில் ஆதரவு கூடியது.