வளமான வாழ்க்கைக்கு வழி
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.கே. இராமலிங்கம்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2004
Add to Cartஇந்த ஜன்மத்தில் விதி வசத்தால் தாழ்நிலையில் இருப்பவர்களுக்கு, ‘அப்படியெனில் எனக்கு உய்வே கிடையாதா? தரித்திரனாக, படிக்க முடியாதவனாக, ஆரோக்கியம் குன்றியவனாக, மன அமைதியற்று இந்த ஜன்மம் பூராவும் இருக்க வேண்டுமா?’ என்ற கேள்வி எழுகிறது.
இதை மனதில் கருதி ரிஷிகளும் ஞானிகளும் வைதிக சூக்தங்கள் பலவற்றை அருளியுள்ளனர்.
தீர்க்க முடியாத சில கர்ம வினைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர ஏனையவற்றை சூக்தங்களை ஒதி அல்லது ஓதுவித்து கஷ்டங்களைத் தீர்த்து இப்பூவுலக வாழ்வை பரிபூரணமாக் ஆனந்தமாக அனுபவித்துக் கடைத்தேறலாம் என்பது வேதங்களின் தீர்ப்பு.
இந்த வகையில் ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒரு நிவாரணம் உண்டு; அதற்கான சூக்தம் உண்டு. இதை நன்கு ஓதி உணர்ந்தவர்களை அணுகி அவர்கள் மூலமாக பரிகாரம் தேட வழி வகை செய்திருப்பதே வைதீக மதத்தின் தனிச் சிறப்பு.