குளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுரா
பதிப்பகம் :ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ்
Publisher :R.S.P Publications
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2007
Add to Cartமேல்தட்டு மக்களின் உறவு சார்ந்த உலகம் சற்று விசித்திரமானதுதான். தன் தேவைகள் எதுவானாலும் பூர்த்தி செய்து கொள்ளும் பண பலம் கொண்டிருந்தாலும், கணவன், மனைவி, மக்கள், சொந்தம் போன்ற உறவுமுறைகளில் நிறைவேறாத அபிலாஷைகளினால் மூச்சுத் திணறுவோர் பலர். அப்படி, பூட்டப்படாத கதவுகளைக் கொண்ட மிகப் பரந்ததோர் தங்கச் சிறைக்கூடத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் உளவியல் போராட்டம்தான் இந்த நாவல். வெளியிலிருந்து பார்ப்போருக்கு வியப்பளிக்கும் அந்த வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் சோகத்தையும், பிடிவாதத்தையும், அகந்தையையும், ரசனையையும், அன்பையும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார் கேரள எழுத்தாளர் பி. பத்மராஜன்.
இந்த நாவலை அதன் மூலத்தின் இயல்பு மாறாமல் மிக பழகு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் சுரா. 'இனிய உதயம்' மாத நாவலுக்காகக் கடந்த ஆறாண்டுகளாக மாதம் ஒரு பிறமொழி நாவலை மொழிபெயர்த்து தந்து கொண்டிருக்கும் சுரா மிக விரைவில் 'மிகக் குறுகிய காலத்தில் 100 நாவல்களை மொழிபெயர்த்தவர்' என்ற சாதனையாளர் பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்ள இருக்கிறார். அரசு விருதுகள் இவரைக் கௌரவிக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்று இதைப் படித்து முடிக்கும்போது நீங்களும் ஆமோதிப்பீர்கள்!