book

கடோபநிஷத்

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீஉமாஷக்தி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684262
குறிச்சொற்கள் :சம்பவங்கள், பொக்கிஷம், புராணம், சித்தர்கள்
Add to Cart

எதைப் பற்றியும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

நீங்கள் யார்? என்று கேட்டால் உடனே நம் பெயரைச் சொல்லுவோம். ஆனால் உண்மையில் அது அல்ல நாம். பின் யார்தான் நாம்?

சந்தோஷம் என்பது சிலருக்குப் பணத்தில் கிடைக்கிறது. சிலருக்கு போகத்தில் கிடைக்கிறது. மேலும் சிலருக்கு உறவுகளில் கிடைக்கிறது. ஆனால் உண்மையான மகிழ்ச்சி என்பது இதில் எதுவும் இல்லை. அது எங்கேதான் இருக்கிறது?

மரணத்துக்குப் பின்னும் மனிதன் வாழ்கிறான் என்கிறார்கள் சிலர். இல்லை என்று மறுக்கிறார்கள் மற்றும் சிலர். இறந்த பிறகு மனிதனின் உண்மை நிலை என்ன?

பிறப்பு, இறப்பு,மறுபடியும் பிறப்பு மீண்டும் மீண்டும் இறப்பு...இதுதான் நம் படைப்பின் நோக்கமா? கடவுளே, என்ன இது மாயவலை? இதிலிருந்து எங்களை யார் காப்பாற்றுவார்?

மனத்தில் தோன்றும் கனமான ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கெல்லாம் கச்சிதமாக விடையளிக்கிறது கடோ பநிஷத். எமனும் நசிகேதனும் பேசும் உரையாடல்களில் நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கும் வெளிச்சம் கிடைக்கிறது.

நூலாசிரியர் ஸ்ரீ உமாஷக்தி கடோ பநிஷத்தின் உட்பொருளை குட்டி குட்டிச் சிறுகதைகள், சம்பவங்கள் மூலம் எளிமையாக விளக்கியிருக்கிறார்.