மனுமுறை கண்ட வாசகம் திருஅருட் பிரகாச வள்ளலார்
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை ஆ. கணபதி, ஆ. சுப்புலட்சுமி கணபதி
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஇராமலிங்க அடிகளார் தென்னார்க்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகே மருதூரில் பிறந்தவர். பெற்றோர் இராமையா பிள்ளை – சின்னம்மாள். காலம் கி.பி.1823 – 1874. இவரை இறையருள் பெற்ற திருக்குழந்தை என்பர். இவரின் வழிபடு கடவுள் முருகன். வழிபடு குரு திருஞானசம்பந்தர். வழிபடு நூல் திருவாசகம். இளமையிலேயே ஓதாமல் உணர்வு பெற்றுக் கவி பாடும் ஆற்றல் பெற்றவர். இவரது முதல் நூல் சென்னைக் கந்தகோட்டத்து முருகன் மீது பாடிய “தெய்வமணி மாலை” என்னும் நூலாகும். இவர் பாடிய பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டு திருவருட்பா எனப்பெயரிடப்பட்டுள்ளது. இவருடைய ஆன்மீக நெறி ஆன்மநேய ஒருமைப்பாடு எனப்படுகிறது. இவருக்குத் திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயரிட்டவர் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆவார்.
இயற்றிய உரைநடை நூல்கள்
- மனுமுறை கண்ட வாசகம்
- ஜீவ காருண்ய ஒழுக்கம்
பதிப்பித்த நூல்கள்
- ஒழிவில் ஒடுக்கம்
- தொண்டைமண்டல சதகம்
- சின்மய தீபிகை
நிறுவிய நிறுவனங்கள்
- சன்மார்க்க சங்கம்
- ·சத்திய தருமசாலை
- ·சத்திய ஞானசபை
- ·சித்திவளாகம்
இவருடைய கொள்கை
1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதியாக உள்ளார்.
2. சாதி, மத, இன வேறுபாடு கூடாது.
3. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
4.சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.