book

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் பெ. போத்தி
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

நோயானது உள்ளகக் காரணிகளாலும், வெளிக் காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம். நோய்க்காரணிகளால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் வெளிக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும். உடலின் செயற்பிறழ்வுகளால் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோய்கள் உள்ளகக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும்.வலியை உண்டாக்கும் நிலைகள், உடலின் செயற்பிறழ்வுகள், கடுந்துன்பம் ஏற்படுத்துபவை, சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குபவை, ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடியவை அல்லது நோய்வாய்ப்பட்டவருடன் உள்ளத் தொடர்பால் பிறருக்கு மரணத்திற்கு இணையாக நிகழும் பிரச்சனைகள் என மனிதர்களில் நோய் என்பது விரிவானதொரு பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகு விரிவானதொரு பொருளில் சிலநேரங்களில், பிற சூழல்கள் அல்லது நோக்கங்களுக்காகத் தனித்துவமாக வகைப்படுத்தக்கூடியவையாக உள்ள காயங்கள், உடல் ஊனங்கள், நலச் சீர்கேடுகள், நோய்க்கூட்டறிகுறிகள், நோய்த்தொற்றுகள், தனிப்பட்ட நோய் உணர்குறிகள், பொது நிலையிலிருந்து விலகிய நடத்தைகள், மனித வடிவம் மற்றும் செயல்களில் உள்ள அசாதாரணமான வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் நோய் என்றே குறிப்பிடுகின்றோம். சாதாரணமாக பிணிகள் உடலளவில் மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமாகவும் மனிதர்களைப் பாதிக்கின்றன. பலவிதமான வியாதிகளுடன் நோய்வாய்ப்பட்டு வாழ்வது வாழ்வைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டத்தினை, மனோபாவத்தினை முற்றிலுமாக மாற்றியமைக்கக்கூடியதாகும்.