இராமாயண ரகசியம்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழருவி மணியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2017
Add to Cartபசியும் காமமும் இல்லையெனில் வாழ்வில் ரூரி இல்லை.
பசிக்கு உணவு தேவை காமத்திற்குத் துணை தேவை:
அதிக உணவு உடலைக் கெடுக்கும். அதீத காமம் உயிரைப் போக்கும்.
பேதமற்று ஓர் ஆண் பல பெண்களோடும். ஒரு பெண் பல
ஆண்களோடும் கலந்த காலத்தில் குறிப்பிட்ட வரையறைக்குள்
உறவுகள் உருவாக வழியில்லை.
காலம் மனிதருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்ததில் வாழ்க்கை
குறித்த மேலான ஞானம் கனிந்தது. அதனால். குடும்பக் கட்டு மானத்தின் அடித்தளம் அமைந்தது. தந்தை, தாய், மகன், மகள், கணவன்-மனைவி என்று உறவுகள் உருவெடுத்தன. அன்பு அனைவரையும் ஒன்றாக இணைத்தது. பாசம் உறவுச்
செடிக்கு நீர் வார்த்தது.
காதல் என்னும் புனிதமான தெய்விக உணர்வு வரம்பு கடந்த
காமத்தை வேரறுத்து, ஒருவனுக்காக மட்டுமே ஒருத்தி ஒருத் திக்காக
மட்டுமே ஒருவன் என்று வேலி போட்டது. இந்த வேலி இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இற்றுப் போகத் தொடங்கிவிட்டது. ஒடுங்கிக் கிடந்த காமம் என்னும் சாத்தான் நுகர்பொருள் கலாசாரத்தின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தின் சாபமாக மாறிவிட்டது.