book

மனதில் நின்றவை (ஐரோப்பிய சுற்றுலாப் பயண அனுபவங்கள்)

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. நவநீத கிருஷ்ணன்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

விடுமுறை காலத்தை செலவிடவோ, சுற்றுலாவுக்கோ செல்லும் இந்தியர்கள், தாங்கள் சென்றுள்ள இடம், அதன் இயற்கையழகு, அங்குள்ள மக்களின் கலாச்சாரம் போன்ற விஷயங்களை பார்ப்பதைவிட, ஸ்மார்ட்போனில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்கிறது, ஹோட்டல்.காமின் 'மொபைல் டிராவல் டிராக்கர்' வெளியிட்டுள்ள ஆன்லைன் கணக்கெடுப்பு. பயணத்தின் போது நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக, மொபைல் போனில் செலவிடுவதாக, 40 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
30 நாடுகளை சேர்ந்த, 9000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், 18--29 வயதினரில், 85 சதவீதம் பேர் செல்பி பிரியர்களாக இருக்கிறார்கள். சுற்றிப்பார்க்கும் இடங்களைவிட, தங்கள் செல்பி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையே அதிகம் விரும்புவதாக, 51 சதவீதம் பேர் கூறுகிறார்கள். ஜோடியுடன் செல்வதைவிட, ஸ்மார்ட்போனுடன் பயணிப்பதற்கே முக்கியத்துவம் என்கிறார்கள், 31 சதவீத இந்தியர்கள். எனினும், இளைஞர்கள் அதிகம் பயணிப்பதை ஊக்குவிப்பதும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுதான் என்கிறது அந்த சர்வே.