book

1984 சீக்கியர் கலவரம்

1984 Seekiyar Kalavaram

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. ராம்கி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789386737335
Add to Cart

ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தை, முதியோர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் வீட்டோடு சேர்த்து கொளுத்திய சம்பவங்கள் ஏராளம். ஒருவரை அழிப்பதற்கு அவர் ஒரு சீக்கியராக இருப்பதே போதுமானதாக இருந்தது. காவல் துறை அதிகாரிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் சீக்கியர் கலவரத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பல இடங்களில் கலவரத்தை முன்னின்று தூண்டியவர்கள் அவர்கள்தாம். அவர்களுடைய வழிகாட்டுதலும் ஒப்புதலும் இல்லாமல் இந்தக் கலவரம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லை. இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டது கலவரத்துக்கான காரணம் என்றால் இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்குக் காரணம் சீக்கியர்களின் புனித வழிபாட்டு இடமான பொற்கோவில் ராணுவத்தால் தாக்கப்பட்டதுதான். இந்தப் புத்தகத்தின் மையம் 1984 சீக்கியர் கலவரம் என்றாலும் பஞ்சாப் குறித்த ஒரு தெளிவான அறிமுகம், பிந்தரன்வாலேவின் எழுச்சி, ஆபரேஷன் புளூ ஸ்டார், இந்திரா காந்தி படுகொலை, ராஜிவ் காந்தியின்
சர்ச்சைக்குரிய நிலைப்பாடு என்று ஒரு விரிவான அரசியல் பின்னணியையும் அளிக்கிறது. இதிலிருந்து நாம் அவசியம் பாடம் படித்தே தீரவேண்டும்.