அறிவியல் கதிர்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.க. மணி
பதிப்பகம் :அபயம் பப்ளிஷர்ஸ்
Publisher :Abhayam Publishers
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :101
பதிப்பு :1
Published on :2017
Add to Cartசுறா மீனின் கன்னிப் பிரசவம்
அமெரிக்காவில் ஷெட் எனும் மீன் காட்சி சாலையில் ஒரு வரிக்குதிரை சுறாமீன் ஆண் வழி இல்லாமல் குஞ்சுகளை பொரித் துள்ளது. சில பெண் விலங்குகள் தன்னுடைய மரபணுப் பொருட்களா லேயே கரு முட்டையை கருவுறச் செய்து குட்டிகளை கன்னிப்பிரவச மாக உண்டாக்குகின்றன. இந்த முறை பர்தெனோஜெனிசிஸ்(parthenogenesis) என்றழைக்கப்படுகிறது. நட்சத்திர மீன்கள், ஆழ்கடல் புழுக்கள் போன்ற விலங்குகளில் கலவியில்லா இனப்பெருக்கம் சாதாரணமாக காணப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு இனங்களில் அது மிகவும் அரிதாம்.
♦ பூமியில் சூரியன்கள் சாத்தியமா?
அமெரிக்க லாரென்ஸ் லிவர்மோர் சோதனைக்கூடத்தில் லேசர் கதிர்களை பயன்படுத்தி அணுச்சேர்க்கையின் மூலம் மின் ஆற்றல் உண்டாக்கப்பட்டுள்ளது.ஹைடிரஜனின் ஐசோடோப்புகளான டியூட்டிரியம், டிரிட்டியம் ஆகியவற்றை லேசர் கதிர்கள் கொண்டு பற்ற வைக்கும்போது வெளிவரும் ஆற்றல், லேசர் கதிர்கள் மூலம் உட்செலுத்திய ஆற்றலைவிட குறைவு. ஆகவே ஆற்றலை உண்டாக்கிவிட்டோம் என்கிறார்கள். லேசர் கதிர்களை தயாரிக்க செலவிட்ட ஆற்றலையும் சேர்த்துக் கொண்டால் கிடைத்த ஆற்றல் எதிர்மறையே. லேசர் கதிர்கள் அல்லாமல் மின்காந்தத்தை பயன்படுத்தி ஆற்றலை உண் டாக்கும் அணுச்சேர்க்கை முறை டோகமாக்ஸ் (Tokamaks) எனப்படுகிறது. இதில் சீனாவின் EAST என்பது முன்னணியில் இருப்பதாக தோன்றுகிறது.அதற்கடுத்தாற் போல் ஐரோப்பாவின் JET உள்ளது.இந்தியாவும் பங்கெடுக்கும் ITERஎனும் பன்னாட்டு திட்டம் 2025இல் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அது அணுச்சேர்க்கை யின் மூலம் சக்தியை 2035இல் தான் உருவாக்கும். அது ஏற்கனவே தெரிந்த தொழில்நுட்பமே; புதிய ஆய்வுக் கூறுகள் இல்லை. எனவே அதிலும் மின் ஆற்றல் கிடைக்காது. அது ஒரு புறம் இருக்க அணுச்சேர்க்கை மூலம் சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் ஆற்றலை எளிதாக உண்டாக்குகின்றன.நம்மால் ஏன் முடிவதில்லை? சூரியனிலும் மற்ற நட்சத்திரங்களிலும் புவிஈர்ப்பு விசை மிக அதிகம்.அதனால் ஹைடிரஜனை மிக எளிதாக அழுத்திவிடுகின்றன.பூமியில் அந்த அளவு புவிஈர்ப்பு விசை இல்லை.எனவே நாம் மின்காந்த சக்தி அல்லது லேசர்கள் கொண்டு அதை சாதிக்கிறோம். இந்த முறையில் ஒரு வினாடிக்கு பத்துமுறை லேசர் கதிர்களை செலுத்த வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் உருண்டைகள்(பெல்லட்டுகள்) தேவைப்படும். தொழில்நுட்பத்தில் அசாதாரணமான இவற்றோடு இதற்கு ஆகும் பொருட் செலவையும் சேர்த்துப் பார்க்கும்போது இது சாத்தியமா என்கிறார் பீப்பிள்ஸ் டெமாகரசி கட்டுரையாளர் பிரபிர் புர்காயஸ்தா. புதிப்பிக்கதக்க ஆற்றல்களான சூரிய சக்தி போன்றவற்றையும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுமே படிவ எண்ணெய் பயன்பாட்டை குறைத்து புவி வெப்பமாதல், சுற்றுசூழல் மாசடைதல் ஆகியவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் என்கிறார் அவர்.
♦மாசகற்றும் மறு சுழற்சி
பெல்ஜியம் நாட்டிலுள்ள ஒரு சுய உதவிக்குழு மனித மயிரை ஒரு இயந்திரத்தின் உதவியினால் சதுர விரிப்புகளாக மறு சுழற்சி செய்துள்ளது. இவை எண்ணெய்,கரிமப் பொருட்களை உறிஞ்சப் பயன்படும். இந்தப் பாய்களை உயிரி பைகளாகவும் மாற்றலாம். இந்த விரிப்புகளை வடிகால்கால்வாய்களில் பொருத்தி நதிகளில் விடப்படும் நீரிலுள்ள மாசுப் பொருட்களை உறிஞ்சலாம்.