book

இந்திரா சௌந்தர்ராஜன் சிறுகதைகள்

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :chennai book fair 2018
Add to Cart

பசுமையான அந்தக் கிராமத்துக் கோயில் முன்னால் அந்தப் படகுக் கார் தேங்கி நின்றது. உள்ளேயிருந்து முட்டாக்கு போட்டபடி ஒரு இளம்பெண்ணும், கூடவே, இன்னொரு பெண்ணும் இறங்கினார்கள். கார் டிரைவர் வெள்ளை யூனிஃபார்ம் வெள்ளைத் தொப்பி என்று அமர்க்களமாக இருந்தான். முட்டாக்கு போட்ட அந்தப் பொண்ணும் உடன் வந்த பெண்ணும் அந்தக் கோயிலுக்குள் நடந்தார்கள். அது ஒரு பழமையான சோழர்காலத்து சிவன் கோயில்...! ஏராளமான கல்தூண்கள் கொண்டு கட்டப்பட்டிருந்தது. அதில் பல நூண்கள் இடுப்பொடிந்த மாதிரி சாய்ந்து கிடந்தன. குறுக்கும் நெடுக்குமாய் குரங்குகளும் உலாவிக் கொண்டிருந்தன. கோயிலில் கூட்டமில்லை. முட்டாக்கு போட்ட அந்தப் பெண்ணும், உடன்வந்த பெண்ணும் நோட்டமிட்டபடியே சன்னதிக்குள் நுழைந்தார்கள். வௌவாய் கழிவு வாசம் தூக்கலாகவே இருந்தது. அப்பின மாதிரி இருட்டு வேறு. அதனாலேயே உள்ளே சன்னதியில் லிங்கம், தீபச்சுடர் ஒளியில் கொஞ்சம் பார்க்கும்படியாகத் தெரிந்தது.