சக்தி லீலை
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :264
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
அம்பிகை என்றாலும் அம்பாள் என்றாலும் சக்தி என்றாலும் தேவி என்றாலும்
தாயார் என்றாலும் அது மேலான அந்த பராசக்தியையே குறிக்கும். மிகச்
சனாதனமானது நமது மதம் என்றால் இதன் தொடக் கத்தை துல்லியமாகக்
கூறமுடியவில்லை என்பதே பொருளாகும். பிற மதங்களைப் பற்றி எண்ணத் தொடங்கிடும்
போதே ஒரு இரண்டாயிரம் வருடம் என்கிற ஒரு காலகதி நம் மனதில்
தோன்றிவிடுகிறது. ஆனால் நம் இந்து மதத்தை இந்த இரண்டா யிரம் வருடம் என்கிற
காலகதிக்குள் எல்லாம் அடைக்கவே முடியாது. உலகப் பொதுமறையான
திருக்குறளுக்கும் இரண்டா யிரம் ஆண்டுக் கணக்கு சொல்லப்படுகிறது.
திருக்குறள் போல சகல முனைகளிலும் ஒரு முழுமையான உலகுக்கே பொதுவான ஒரு நூலை
வேறெங்கும் இன்றுவரை காணமுடியவில்லை. அத்தனை முழுமையான ஒரு திருக்குறளுக்கே
இரண்டாயிரம் ஆண்டுகால வயதென்றால், நம் மதத்துக்கு எத்தனை மூப்பும்
முதுமையும் இருந்திருக்க வேண்டுமென்கிற கேள்வி எழுகிறது.