book

நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்

₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்டீபன் ஆர். கவி, நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788183224390
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

உலகெங்கிலும் இரண்டு கோடிப் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ள ’அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்’ புத்தகத்தின் ஆசிரியரும், மிகச் சிறந்த பேச்சாளருமான ஸ்டீபன் ஆர். கவி, மகத்துவத்தை அடைவதற்கான சாத்தியக்கூறு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது என்பதில் ஆழமான நம்பிக்கை வைத்திருந்தார். ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பத்திரிகையில் வெளியான நெஞ்சை உருக்கும் கதைகளின் தொகுப்பான இப்புத்தகத்திற்கு அவர் அற்புதமான முன்னுரை எழுதியுள்ளதோடு, ஒவ்வோர் அத்தியாயத்தின் துவக்கத்திலும் முடிவிலும் ஆழமிக்கக் கருத்துரைகளையும் வழங்கியுள்ளார்.                      
 
இத்தொகுப்பிலிருந்து நீங்கள் மூன்று வழிகளில் பயன் பெறுவீர்கள்.
 
-முதலாவதாக, இத்தொகுப்பு வாழ்க்கைப் புயலில் இருந்து ஒரு புகலிடமாகவும், ஒரு நம்பிக்கைக் கீற்றாகவும் உங்களுக்கு அமையும்.                                                               
 
-இரண்டாவதாக, இத்தொகுப்பு இன்றும் சரி, உங்கள் வாழ்நாள் முழுவதும் சரி, உங்கள் வாழ்நாள் முழுவதும் சரி, உங்கள் ஆற்றலுக்கு ஏற்ற வகையில் மிகச் சிறப்பாக வாழ்வதற்கு உங்களுக்கு உதவக்கூடிய எந்தவோர் உத்வேகத்தை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்களோ, அது இப்புத்தகத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தில் உங்களுக்குக் கிடைக்கும்.
 
-மூன்றாவதாக, இத்தொகுப்பு உண்மையிலேயே நல்லிதயம் படைத்த, தங்களைச் சுற்றி இருக்கும் உலகிற்குப் பெரும் பங்களிப்புகளை வழங்குகின்ற, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள மக்களில், நீங்களும் ஒருவராக இருப்பதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம். மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக உங்களால் ஆக முடியும் என்று நம்புங்கள். உங்கள் செல்வாக்கும் தாக்கமும் வளர்ந்து பெருகுவதை கண்டு மகிழுங்கள்.             
 
1.துணிந்து செயலில் இறங்குவது குறித்தத் தேர்ந்தெடுப்பு - வாழ்விற்குள் நாம் கொண்டு வரும் ஆற்றலைக் குறிக்கிறது. நம் மன உறுதியை குறிக்கிறது.
2.வாழ்க்கைக்  குறிக்கோள்  குறித்தத் தேர்ந்தெடுப்பு - வாழ்வில் நாம் எங்கே சென்றடைவதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, எதை சாதிப்பதைத்  தேர்ந்தெடுக்கிறோமோ, அதை குறிக்கிறது.
3.பின்பற்ற வேண்டிய கொள்கைகள் குறித்தத் தேர்ந்தெடுப்பு - நாம் தேர்ந்தெடுத்துள்ள இடத்தை நாம் எவ்வாறு சென்றடைவோம் என்பதையும், நம் இலக்குகளை நாம் எவ்வாறு சாதிப்போம் என்பதையும் உணர்த்துகிறது.
 
இத்தொகுப்பில் குறிப்பிடப்பட்ட மக்கள் அனைவரும், ஒவ்வொரு நாளையும் மகத்துவமான நாளாக ஆக்குவதை தீவிரமாகக் கடைபிடிக்கின்றனர். இந்த மூன்று  தேர்ந்தெடுப்புகளுக்கும் தாங்கள் அளித்தத் செயல்விடைகளின் மூலம் தங்களைத் தனித்துவப்படுத்திக் கொண்டுள்ளனர்.