கனாத்திறமுரைத்த காதைகள்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சித்ரன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388133128
குறிச்சொற்கள் :2019 Chennai Book Fair
Add to Cartஇரவெல்லாம் மனைவியைக் கட்டிக் கொண்டு கதைகள் சொல்லுவான். அவனது கதைகள் ஒரு சொலவடை அல்லது விடுகதையில் ஆரம்பித்து கதைகளுக்குள் கதைகளாய் விரிந்து செல்லும். அநேக காலங்களுக்குமுன் கடவுள் இவ்வுலகை படைத்தபோது பெண் மட்டுமே இருந்தாள் என்பவன் பல யுகங்களுக்குப் பிறகு, இரண்டு கூழாங்கற்களையும் பனையின் ஆண் மலரையும் பெண்ணுடலில் பொருத்தி கடவுள் ஆணைப் படைத்தான் என்பான். அவள் ஏனென்று கேட்க வேறோர் உடலின் தேவையற்று, பெண்களே குழந்தைகளை உருவாக்கிய காலமது என்பான். பிறரின் தேவையற்று சந்ததிகள் பெருகியதால் யாரையும் வசியப்படுத்தும் ஒலிகள் உருவாகவில்லையென்றும் வசிய ஒலிகள் உருவாகததால் மொழிகளும் உருவாகவில்லை யென்றும் சொல்வான். கடவுள் ஆண்களை உருவாக்கியதால் அவன் இதுவரை அறிந்திராத உலகை விவரிக்க, பெண் முதல் கதைசொல்லியானாள். கதைகளை உருவாக்கத்தான் கடவுள் ஆணைப் படைத்தான் என்பவன் மனிதன் உருவாக்கிய மிகப்பெரிய போதை வஸ்து கதைகள்தான் என்பான். (கொனட்டி முத்தன் கதையிலிருந்து)